Friday, November 12, 2010
ஷங்கருக்கு போட்டியா நானும் கேப்டனும்....
ஹலோ ஏழை, பாழைகளே, எழுத உக்காந்தாச்சு, சீரியசா ஏதாவது எழுதலாம்னு பாத்தா பக்கத்துலையே ஒரு நாதேரி உக்காந்து மொக்க போடுது. சரி ஒரு கவித எழுதலாம்னு பாத்தா, சனியன் அந்த கருமாந்தரம் நமக்கு வருதுஇல்ல. சர்தாண்டான்னு, ஷங்கரோட ரோபோக்கு போட்டியா கேப்டன வச்சு, நம்ம பாய் பிரெண்ட் (இது டீகட பாய்ங்க) தயாரிப்ப்புல ஒரு படமெடுத்துபுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். படம் பேரு விண்ணரசு( பேரரசு, வல்லரசு போக மிச்சமிருக்கிறது ). நவ் லெட் அஸ் வாட்ச் தா ப்ளே, ஓபனிங்ல, நம்ம ஹீரோ பேரு முருகன், எஸ், எஸ், மெக்கானிக் ஷாப்லதான் வேல பாக்குறாரு. அவரு டைட் டீஷர்ட் ல மயங்கி இஷா கோபிகர் கேப்டன வெறித்தனமா காதலிக்கிறாங்க. இஷாவோட அப்பா யாருன்னா நம்ம பாகிஸ்தான் தீவிரவாதிகளோட கையாள். நடு நடுல இஷாவோட காதல் ஆராரோ காதல் ஆராரோனு டூயட் பாடுறாரு (அதுல அந்த ரொமான்ஸ் சீக்வென்ஸ்ல இஷாவோட பேர்பாமன்ஸ்க்கு ஆஸ்காரே குடுக்கலாம்). க்ளைமேக்ஸ்ல பாகிஸ்தான் தீவிரவாதிங்க ப்ளைட்ட ஹய்ஜாக் பண்ணி fault ஆக்கி உட்டுட்டு பாரசூட்ல கீழ குதிசிராங்க்ய. அப்ப நம்ம கேப்டன் மக்கள காப்பாத்துறதுக்காக ப்ளைட்டுக்கு அடில படுத்துகிட்டு பட்டி, டிங்கரிங் வேலையெல்லாம் பாக்குறாரு. இதுக்கு நடுல பாரசூட்ல குதிச்ச நம்ம தீவிரவாதிங்ககூட பேலன்ஸ் பண்ணி தலைகீழா சண்ட போட்டு ஜெயிகிறாரு. ஜெயிச்சு ப்ளைட்ட ஒரு பொட்ட காட்ல லான்ட் பண்றாரு, அந்த எடம் எப்புடி நம்ம இந்திய அரசாங்கத்துக்கு முன்னாடியே தெரியுமோ, கரெக்டா ஆல் போலிஸ், ஐ ஜி, இஷா, அவுங்க அப்பா, ஆல் பொது மக்கள் அந்த பொட்ட காட்ல கூடிருவாங்க்ய (டேய், இவ்வளவு நேரம் எங்கடா இருந்தீங்க?). அப்புறம் கேப்டனுக்கு மெடல், சிபிஐல வேல. சரி சரி இன்னக்கி மொக்க போதும், நீங்க எல்லாரும் வீட்டுக்கு போய் குடல் கொழம்பு வச்சு சாப்புடுங்க.
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by a blog administrator.
ReplyDelete