வெறுமையின் அழுத்தத்தில் திமிறி கொண்டிருந்த, என்ன நிறமென்று யூகித்தறிய இயலா சிறிதே வேதனைகளால் கருமை படர்ந்த, தனிமையின் அடர்த்தியில் பிசுபிசுத்து போன அறையில் காலண்டரின் பக்கங்கள் தேடுதல்களின் உச்சத்தில் படபடத்து கொண்டிருந்தது.
காதல் என்பது ஒரு தேடல் மட்டுமே என்பதை உணராமல் அதை புனிதம் தெய்வீகம் என்பவர்களை நினைத்தால் இப்போதேல்லாம் சிரிப்பு மட்டுமே எஞ்சுகிறது. அடுத்தது என்ன என்பது மட்டும்தான் காதலோ, ஏற்று கொண்டாலே கிட்டும் வீடுபேற்றில் ஜனிக்கும் காதல் முத்தத்தில் ஆரம்பித்து உச்சத்தின் வீழ்ச்சியில் செத்துவிடுகிறது. பெர்னார்ட் ஷா சொன்னது போல் சொல்லி விட்டாலே காதல் செத்துவிடுகிறதோ?!. உண்மையை சொன்னால் ஏற்று கொள்ளாத மனம், நீர்க்குமிழியின் நிறபூச்சில் ஏமார்ந்து அதில் முகம் பார்த்து உவகை கொள்கிறது. வாழ்க்கை அதன் ஷட்ஜமம், மத்திமம், காந்தாரதிலிருந்து நிலை பிரளும்போது கசந்தது.
அந்த ஒரு நொடிதான் வலித்தது.

No comments:
Post a Comment